top of page

சென்னை குயர் இலக்கிய விழா 2020 லைவ்

நேரலையில் காண

  • Facebook
  • Twitter
  • YouTube

நாள்: 19, 20, 26 & 27 செப்டம்பர் 2019 - மாலை 6.00 முதல் 9.30 வரை | இடம்: இணையத்தில்

சென்னை குயர் இலக்கிய விழா 2020 குறித்த அறிவிப்பினை இங்கு வெளியிடுகிறோம். பல நாட்களாக நமது குயர் சென்னை க்ரோனிக்கல்ஸின் குழுவோடு கலந்து ஆலோசித்த பிறகு இந்த வருட இலக்கிய விழாவை இணையம் வழியே நடத்த முடிவு செய்திருக்கிறோம். குயர் இலக்கிய விழா 2020 லைவ் – என்று இவ்வருட விழாவிற்கு பெயரிட்டிருக்கிறோம்.

நம்முடைய வாழ்க்கையை கோவிட்–19 பெருமளவில் பாதித்திருக்கும் நிலையில் சமூகத்திலிருந்தும், நண்பர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நாம் நாமாக இருக்க முடிகிற, நமக்கு பாதுகாப்பாக இருந்த பால்புதுமையினருக்கான பல நிகழ்வுகள் உலகம் முழுவதும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.

கோவிட்-19 காரணமாக நமது ஒருங்கிணைப்புக் குழுவிற்குள்ளேயே வேலையின்மை, வேலை இழப்பு,  ஊதியம் குறைப்பு, கோவிட்-19 அவசர மருத்துவ உதவிப்பணி என இக்காலத்தின் நிச்சயமின்மையை சமாளித்துக் கொண்டிருக்கிறோம். சென்னை குயர் இலக்கிய விழா நமது வாழ்வின் ஒரு முக்கியமான பகுதியாக மாறி, நம் நண்பர்களையும், குடும்பத்தையும் சந்திக்கும் ஒரே நிகழ்வாக மாறிவிட்டது என்பதும் மறுக்க முடியாத உண்மை. வழக்கத்தை விட இந்த வருட இலக்கிய விழா கொஞ்சம் மாறுபட்டு இருக்கும். அதே சமயம், ஒரு சமமான சமத்துவமான சமூக இயக்கத்திற்கு, இந்த உரையாடலை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் நாம் அறிந்திருக்கிறோம். ‘நாங்கள் இருக்கிறோம்’ என நமது இருப்பை உலகுக்குச் சொல்வது முக்கியம். கோவிட்-19 நமது வாழ்க்கையை எந்த அளவுக்கு பாதித்திருந்தாலும் நாம் அமைதியாக இருக்கப் போவதில்லை. தொடர்ந்து நம் கதைகளை சொல்லிக் கொண்டு, இந்த உலகை நமக்கு ஏற்றதாக, மேம்பட்டதாக மாற்றிக் கொண்டே தான் இருப்போம். 

விழாவிற்காக பேச்சாளர்களை பரிந்துரைத்த, அவர்களோடு தொடர்புகொள்ள நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். நிச்சயமின்மை சூழ்ந்திருக்கும் இப்படியான ஒரு சமயத்தில் இலக்கிய விழாவில் பங்கெடுக்க முன் வந்திருக்கும் பேச்சாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். 

கட்டமைத்து வைக்கப்பட்டிருக்கும் கதைசொல்லும் முறையை உடைக்கும் ‘பால்புதுமையினர் மற்றும் மாற்றுத்தள செயல்பாட்டாளர்களின் அனைவரையும் உள்ளடக்கிய கதையாடல்’ எனும் பேசுபொருள் இந்த வருடம் எடுத்திருக்கிறோம். பால்புதுமையினர் கலையும் இலக்கியமும் எல்லோருக்குமானது என்பதைப் பொது ஊடக வெளி புரிந்து கொள்ள நாம் எடுக்கும் மற்றும் ஒரு முயற்சி தான் இது. 

2018ல் பால்புது எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், கலைஞர்களோடு பொதுவெளியில் இயங்கிங்கொண்டிருக்கும் ஆதரவாளர்களையும் இணைத்து இந்தியாவின் முதல் குயர் இலக்கியவிழாவினை நடத்தினோம். அப்போது முதல் பால்புது இலக்கியம் மற்றும் கலைகளையும்,  பொது வெளியையும் இணைக்கும் பாலமாகவே நமது இலக்கிய விழா இருந்து வருகின்றது.

கடந்த இரண்டு வருட இலக்கிய விழாக்களைப் போல  முழுநாள் நிகழ்வாக இல்லாமல்,  வரும் செப்டம்பர் மாதம் 19, 20, 26 மற்றும் 27 தேதிகளில் மாலை 6 முதல் 9.30 வரை குயர் இலக்கிய விழா 2020 லைவ் நடைபெற இருக்கிறது.  பேச்சாளர்கள், தலைப்புகள், நேரம் முதலான தகவல்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும்.

எங்களோடு இணைந்து செயல்பட விருப்பமிருப்பவர்கள் மற்றும் ஊடக தொடர்புக்கு, qlf@queerchennaichronicles.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும்.

~*~*~

bottom of page